தாய்ப்பாலா, மாப்பாலா சிறந்தது? | Which is better, breastmilk or formula milk?

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அநேகமான தாய்மாருக்குத் தெரியும் தாய்ப்பாலே தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்ததென்று. ஆனால், இந்த நவீன காலத்தில், தாய்மாரும் வேலைகளுக்குப் போய் தத்தமது குடும்ப வருமானத்தினைப் பெருக்கி குடும்பத்தினுடைய பொருளாதாரச் சுமையினைப் குறைப்பதில் முக்கியமான பங்கினைச் செய்கின்றார்கள். இதனால், பால் கொடுக்கும் தாய்மார்கள், வேலைக்கும் போய்க்கொண்டு குழந்தையையும் சரியான முறையில் பார்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதனால், தாய்மார்கள் புட்டிப் பாலினை தமது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இதனால், தாய்ப்பாலுக்கும், புட்டிப் பாலுக்கும் இடையே சிற்சில நன்மைகளும், தீமைகளும் கால சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பாலானது, தாயின் மார்பகத்திலிருந்து எப்பவும், அதாவது, எந்த கால நேரம், சூழ்நிரை என்று இல்லாமல் பிள்ளைக்குத் தேவையான நேரம் அது புதிதாகவும், உடனேயும், சுத்தமாகவும் சுரக்கப்படுகின்றது. இத் தாய்ப்பாலானது தாயின் உடல் சூட்டின் வெப்பநிலையில் சுரக்கப்படுவதனால் பிள்ளையானது உடனே குடிக்கக் கூடியதாகவும் உள்ளது.

For infant nutrition most mothers believe that breast milk is the better source of all nutrients compared to the formula feed. However, nowadays most of the mothers who are employed prefer to give formula feed to their babies for their convenience. Formula feed also provides necessary nutrients to the babies. Though breast milk and formula feed provide necessary nutrition there are advantages and disadvantages.

Breast milk is naturally produced by the mothers’ breast at any time, fresh, it contains all necessary nutrients and importantly antibodies. Once the breast milk is produced it is warm enough to be drunk by infants. There is no contamination as there is no exposure to the environment. When a baby needs milk, it is always ready unless a mother uses medication/s to minimise or stop breast milk secretion.

After a baby is born, breasts produce a golden coloured concentrated liquid called colostrum. It contains immunoglobulin, IgA, lactoferrin (also prevents infection), white blood cells, minerals such as copper, lead, magnesium, and vitamin A and more. Therefore, colostrum should be given to the newly born baby.

தாய்ப்பாலா, மாப்பாலா சிறந்தது? | Which is better, breastmilk or formula milk?

Photo by Helena Lopes on Unsplash

தாய்ப்பாலானது குழந்தைக்குத் தேவையான எல்லாவிதமான ஊட்டச் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன், நோய் எதிர்ப்புச் சத்தியைக் கொடுக்கக் கூடிய அன்ரிபொடீஸையும் (Antibodies) கொண்டுள்ளது. அந்த அன்ரிபொடீஸானது குழந்தை பிறந்த சில நாட்களுக்கு ஒரு பொன்னிறமான நிறத்தில் சுரக்கப்படும் கொலொஸ்றம் (colostrum) என்னும் சுரப்பில் காணப்படுகின்றது. கொலொஸ்றமானது ஒரு பூரண உணவென்று சொல்லக்கூட முடியாது, அதையும் விட மிகவும் எல்லாவகையான சத்துக்களைக் கொண்டது. அதாவது, IgA , லக்ரோபெ(f)ரின் (நோய்களை எதிர்கும் ஒரு புரதம்), வெள்ளைக் குருதிக் கலங்கள், வைற்றமின் ஏ, கனியுப்புக்களான - கொப்பர், ஸிங், மக்னீசியம் என பலவற்றினை கொண்ட உணவுச் சுரப்பு. இப்போது சொல்லுங்கள், கொலொஸ்றத்தினை எந்த வகைக்குள் உள் அடக்கலாம் என்று. எனவே, குழந்தைக்கு கட்டாயமாக கொலொஸ்றத்தினை குடிக்க விட வேண்டும். ஏன் என்று கேள்விக்குப் பதிலினை ஏற்கனவே கூறியுள்ளேன்.

பொதுவாகச் சொன்னால், அநேகமான தாய் மார்களால் நன்றாகப் பாலினைச் சுரக்க முடியும். ஆனால், ஒரு சில தாய்மார்களால் குழந்தைகளின் தேவைக்கு அளவான பாலினைச் சுரக்க முடிவதில்லை என்ற ஒரு கேள்வி வழமையாக உருவாகுவதுமுண்டு. இதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. இதற்குரிய சில காரணங்காவன; தாயின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் குறைபாடு, சில நோய்களின் தாக்கங்கள், குழந்தைக் கட்டுப்பாட்டுக் குளிசைகளின் பாவனைகள், சத்துணவுக் குறைபாடு, மார்பில் செய்யப்பட்ட சத்திரைச் சிகிச்சை, அத்துடன், உளவியல் தாக்கங்களினால் ஏற்படும் உடல் - உள மாற்றங்கள் என்று பல காரணங்கள் உள்ளன.

தாய்மார் பால் கொடுப்பதனால் அவர்கள் நினைக்கலாம் தாங்கள் தமது பிள்ளைகளை குறிப்பான நோய்களான, ஆஸ்மா, நீரழிவு, உடற்பருமன் எனப் பல விதமான நோய்களில் இருந்து காப்பாற்றுவதாக, ஆனால், பிள்ளாகள்தான் தாய்மார்களை மிகக் கொடூரமான புற்று நோய் போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றுகின்றது. அத்துடன் தாய்ப்பால் கொடுப்பதனால் தாய்க்கும் - பிள்ளைக்குமான தனித்துவமான ஒரு பிணைப்பினை உருவாக்கும்.

மாறாக, புட்டிப் பாலானது செயற்கையாக தொழிற்சாலைகளில் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட பாலானது தாய்ப்பாலுடன் ஒத்துப்போகக் கூடியவாறு அதாவது எவ்வாறான சத்துக்கள், விற்றமின்கள் குழந்தைக்குத் தேவையானதோ அவற்றையெல்லாம் உள்ளடக்கி விற்பனையாகுகின்றது. ஆனால், இப் புட்டிப் பாலில் நோய் எதிர்ப்புச் சக்திக்குரிய அன்ரி பொடீஸ்கள் இல்லை. அத்துடன் தாய்ப்பாலிலுள்ள கொலெஸ்றமும் இல்லை. இந்தப் பயன் பூரணமில்லாத புட்டுப் பாலானது தாய்ப்பாலுடன் எந்த அளவிலும் ஒத்துப் பார்க்க முடியாததொன்றாகும். மேலும், புட்டிப் பாலானது எப்போது குழந்தைக்குப் பசி எடுக்கின்றதோ அப்போதுதான் தாயாரித்துக் கொடுக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை உருவாகின்றது. அத்துடன், சிலதாய்மார் பாலைத் தயாரித்து அதன் சூடு குறையாமல் பாதுகாத்து வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. இதனால், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு சம்பந்தமான சுகயீனங்கள் உருவாகக் காரணமாகின்றது.

எனினும், புட்டிப்பாலானது எவ்வளவு சத்துக்களைக் கொண்டிருந்தாலும், தாய்ப்பாலுக்கு ஒருநாளுபம் நிகராகது என்பது இப்போது உங்களால் கூட ஏற்றுக் கொள்ளமுடியும்.

Usually, most of the mothers breasts adequately secrete milk for a baby. However, some mothers complain that their breasts do not secrete adequate milk to feed their babies. There are many reasons why breasts are not secreting adequate milk, such as hormonal imbalance, using contraceptive pills, using medication to prevent or minimise the secretion of milk for some reason and more.

Breast milk contains a balance of nutrients, such as proteins, fats, vitamins, and antibodies that take the major and initial role and contribute to the baby's immune system. The latter source protects a baby from infections and diseases.

Breastfeeding establishes a unique bond between a baby and its mother. It lowers the risk of developing long-term ailments such as diabetes, asthma, and obesity.

On the other hand Formula feed, is an artificially made product though it also contains essential vitamins and nutrients, but not antibodies. However, It simulates breast milk.
As the modern formulas are fortified with essential vitamins and nutrients, ensuring babies receive necessary nutrition for their health growth and development.

Though the formula feed provides essentials for the babies’ healthy growth and development, breast milk cannot be beaten by any form of products.

வாழ்க வளமுடன் - Live prosperously